ரியல் பெட்டிஸ் வீரர் ஆண்டனிக்கு இளம் ரசிகர் ஸ்பைடர் மேன் பரிசு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆண்டனி (25) தற்போது ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வந்தபிறகு ரியல் பெட்டிஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பிய கான்பிரன்ஸ் லீக் அரையிறுதியின் 2-ஆம் கட்ட போட்டியில் ஆண்டனி ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து ரியல் பெட்டிஸ் அணியை வெற்றிபெறச் செய்து முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 100 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்ட ஆண்டனி மோசமாக விளையாடியதால் கிண்டல்கள் அதிகரித்தன. பின்னர், ஆண்டனியை லோன் அடிப்படையில் ரியல் பெட்டிஸ் அணிக்கு விற்கப்பட்டது.
தற்போது, சிறப்பாக விளையாடிவரும் ஆண்டனியை ரியல் பெட்டிஸ் அணியினர் இன்னும் கூடுதலாக ஓராண்டு இருக்கும்படி விரும்புகின்றனர்.
ஆண்டனி பல வகையில் தனது கொண்டாட்டங்களில் ஈடுபடுவார். அதில் ஸ்பைடர் மேன் பாணியும் பிரபலமானது.
இந்நிலையில், ஆண்டனிக்கு ரியல் பெட்டிஸ் அணியின் இளம் ரசிகர் ஒருவர் 'ஸ்பைடர் மேன்' கீ செயினை பரிசாக வழங்கியிருக்கிறார். இதனை ஆண்டனி வாங்கிக்கொண்டுள்ளார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
கோமாளியாக விமர்சிக்கப்பட்ட ஒருவர் அதே மக்களுக்கு பிடித்த நாயகனாக மாறுவது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது என்பதற்கு ஆண்டனியின் வாழ்க்கையும் ஒரு சாட்சியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.