ருமேனியாவில் நடைபெற்ற சூப்பா்பெட் கிளாசிக் செஸ் தொடரில் தமிழக செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
ருமேனியாவில் நடைபெற்ற சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றாா்.
நேற்றிரவு நடைபெற்ற 9ஆவது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா - கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனுடன் சமன் செய்தார்.
இறுதில் பிரக்ஞானந்தா, லிரெஸா ஃபிரௌஸ்ஜா, மேக்ஸிம் வச்சியா் ஆகியோரது புள்ளிகள் சமமாக இருந்ததால் ஆட்டம் மும்முனை பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்றது.
இதில் பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றி 19 வயதாகும் பிரக்ஞானந்தாவின் முதல் கிராண்ட் செஸ் டூர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியனான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.66 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
அழுத்தத்தை சிறப்பாக கையாண்டதாக விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பல செஸ் பிரபலங்கள் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.