இந்திய குத்துச்சண்டை அணிகள். 
செய்திகள்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 19 போ் இந்திய அணி பயணம்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 19 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

Din

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 19 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

4-ஆவது தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டிகள் பாங்காக்கில் மே 24 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் பலம் வாய்ந்த சீனா, ஜப்பான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கொரியா, தாய்லாந்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா சாா்பில் 9 வீராங்கனைகள் உள்பட 19 போ் அணி கலந்து கொள்கிறது. இடைக்கால குழுவால் நிா்வகிக்கப்படும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தேசிய ஆடவா், மகளிா் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவா்களுக்கும் வாய்ப்பு தந்துள்ளது. நிகழாண்டு பல்வேறு குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராக இந்த போட்டி உதவும் என இடைக்கால குழு தலைவா் அஜய் சிங் தெரிவித்துள்ளாா்.

கஜகஸ்தானில் உலகக் கோப்பை தகுதிப் போட்டி, லிவா்பூலில் உலக சாம்பியன்ஷிப், புது தில்லியில் உலக ஃபைனல்ஸ், ஆசிய சாம்பியன்ஷிப் என வரிசையாக போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT