ஆசிய தடகளப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
தென்கொரியாவில் நடைபெற்ற 26-வது ஆசிய தடகளப் போட்டியில், 4x100 தொடர் ஓட்டத்தில், இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தமிழக வீரங்கனை அபிநயா ராஜராஜன் (18), ஷ்ரபனி நந்தா, சினேகா எஸ்எஸ், நித்யா கந்தே உள்ளிட்ட அணி வெற்றி பெற்றது.
மேலும், 400 மீ தடை தாண்டுதலில் கால் வீக்கத்துடன் ஓடி, தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்றார்.
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றது.
இத்தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் பங்கேற்ற நிலையில், அவர்களில் 7 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.