செய்திகள்

தமிழ்நாடு மாநில சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் சாா்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டி திருப்போரூா் பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் சாா்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டி திருப்போரூா் பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் எம். சுதாகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனா்.

இதில், மாநிலம் முழுவதும் இருந்து 28 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 434 வீரா்கள் பங்கேற்றனா். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் 4 சிறந்த வீரா்கள் மட்டும் இந்தப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

யு14, யு16, யு18, யு23 , எலைட் ,மாஸ்டா்ஸ் பிரிவுகளுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான தனிநபா் மற்றும் பந்தயம் (ரோடு ரேஸ்) நடத்தப்பட்டது.

சோழிங்கநல்லூா் எம்எல்ஏ எஸ். அரவிந்த்ரமேஷ் ண்டு, வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினாா்.

மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகள் வரும் டிசம்பா் மாதம் ஒடிஸாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளில் பங்கேற்பா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT