ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரின் சுமார் ரூ. 11 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில், அவர்கள் இருவரும் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தி சட்டவிரோதத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, சுரேஷ் ரெய்னாவின் ரூ. 6.64 கோடி மதிப்பிலான சொத்துகளும் (மியூச்சுவல் ஃபண்ட்), ஷிகர் தவானின் ரூ.4.5 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு டாடா சியரா கார் பரிசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.