ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கெனவே, பெங்களூரு எப்ஃசி அணிக்காக் 2023 முதல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலோ - இந்தியராக மும்பையைப் பூர்விகமாகக் கொண்ட ரியான் வில்லியம்ஸ் (32 வயது) ஆஸ்திரேலியாவின் குடியுரிமையைக் கைவிட்டு கால்பந்து விளையாட்டிற்காக இந்தியாவின் குடிமகனாக மாறியுள்ளார்.
ஏஃப்சி ஆசிய கோப்பை 2027 தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்த மாதத்தில் நடைபெறும் போட்டியில் இவர் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
1956-இல் இவரது தாத்தா இந்தியாவின் புகழ்பெற்ற சந்தோஷ் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.
இவருக்கு முன்பாக ஜப்பானைச் சேர்ந்த இஜுமி அரட்டா 2012-இல் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஃபுல்ஹம் கால்பந்து கிளப்பில் ரியான் விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் யு-20, யு-23 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். மிட்ஃபீல்ட்ராக இருக்கும் இவர் மொத்தமாக 354 போட்டிகளில் 38 கோல்கள் அடித்துள்ளார்.
பந்தினை லாவகமாக பாஸ் செய்வதில் வல்லவரான இவர் இந்திய அணியில் நல்ல மாற்றத்தினை உருவாக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியக் குடியுரிமையைப் பெற்ற மகிழ்ச்சியில் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.