2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பைக்கு, நெதர்லாந்து அணி தேர்வாகியுள்ளது.
மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 34-ஆவது அணியாகத் தேர்வாகியுள்ளது.
ஜோஹன் க்ரூஃப் திடலில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியும் லிதுவேனியா அணியும் மோதின.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணியினர் 16, 58 (பெனால்டி), 60, 62 -ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள்.
லிதுவேனியா ஒரு கோல்கூட அடிக்கவில்லை. நெதர்லாந்து 4-0 என அபார வெற்றியுடன் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.
கடந்த உலகக் கோப்பை காலிறுதியில் ஆர்ஜென் டீனாவுடன் 2-2 என டிரா செய்து, பெனால்டியில் 3-4 என தோல்வியுற்றது. இருப்பினும் அந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த போட்டியாகக் கருதப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.