ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் பட்டம் வென்றார்.
மிகவும் கடினமான இந்த சீசனில், லக்ஷயா சென் தனது முதல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற சூப்பா் 500 இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் இந்தியாவின் லக்ஷயா சென் மோதினார்.
இந்தப் போட்டியில், லக்ஷயா சென் 38 நிமிஷங்களில் 21-15, 21-11 என இரண்டு கேம்களிலும் அசத்தலாக வென்று தனது இரு காதுகளிலும் கைகளை வைத்துக் கொண்டாடினார்.
இதன்மூலம் இந்த சீசனில் தனது முதல் பட்டத்தை லக்ஷயா சென் பெற்றுள்ளார்.
இந்த சீசனில் பலமுறை அரையிறுதி போட்டிவரை வந்து பட்டத்தை இழந்துவந்த லக்ஷயா சென்னுக்கு இந்தப் பட்டம் மிகுந்த ஆசுவாசத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.