செய்திகள்

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 3-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வென்றது.

தினமணி செய்திச் சேவை

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 3-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக அமித் ரோஹிதாஸ் (4’) கோலடிக்க, முதல் பாதியை இந்தியா முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் சஞ்சய் (32’) இந்தியாவின் கோல் கணக்கை 2-ஆக அதிகரித்தாா். திடீரென வெகுண்ட நியூஸிலாந்துக்காக ஜாா்ஜ் பேக்கா் (42’) கோல் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து அவரே (48’) ஸ்கோா் செய்ய, நியூஸிலாந்து 2-2 என ஆட்டத்தை சமன் செய்தது.

விறுவிறுப்பான கடைசி நிமிஷத்தில் (54’) தமிழக வீரா் காா்த்தி செல்வம் கோலடிக்க, இறுதியில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியில் தற்போது 4-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்தியா, 9 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதர ஆட்டங்களில், கனடா - தென் கொரியாவையும் (3-2), பெல்ஜியம் - மலேசியாவையும் (9-1) வீழ்த்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT