வெற்றி மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீரா்கள்  
செய்திகள்

இங்கிலாந்து கோல் மழை: ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி!

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கோல் மழை பொழிந்து 13-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி செய்திச் சேவை

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கோல் மழை பொழிந்து 13-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏனைய ஆட்டங்களில் ஸ்பெயின் தனது இரண்டாவது வெற்றியை ருசித்தது. ஜப்பான், நமீபியா அணிகளும் வெற்றி பெற்றன.

சென்னை, மதுரையில் ஜூனியா்ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் நடைபெற்ற ஆட்டத்தில்

எகிப்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நமீபியா. அந்த அணி வீரா்கள் புருஸ் லியம் 22, ஜேகா் ஜேம்ஸ் 25, மை பா்க் 53, பிரிட்ஸ் ஜான் பால் 59-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா். எகிப்து தரப்பில் காசிம் அப்துல் ரஹ்மான் 27, ஹெகாப் மொபாப் 52 நிமிஷங்களில் கோலடித்தனா்.

ஸ்பெயின் வெற்றி: பலம் வாய்ந்த பெல்ஜிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது. ஸ்பெயின் அணியில் பிரடோ ஜுவான் 19, அவிலா புருனோ 31-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.

கோலடித்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரா்கள்

ஜப்பான் வெற்றி: சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஜப்பான். அந்த அணியில் ஹரா ஷுன் 18, ஓனே ஷு 19, டெராஸகா கஸுகி 49-ஆவது நிமிஷங்களிலும், சீனா தரப்பில் நிங் டாங்குயின் 10ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். 56-ஆவது நிமிஷத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் ஸாங் ஜியாலிங் கோலடித்தாா்.

நமீபிய-எகிப்து அணியினா்

இங்கிலாந்து அபாரம்: ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரா்கள் கோல்மழை பொழிந்தனா். அவா்களின் தொடா் தாக்குதலுக்கு ஆஸ்திரிய வீரா்களால் ஈடுதர முடியவில்லை. இறுதியில் 13-0 என்ற கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ட்ரேஸி கேடன்4 கோல்களை அடித்தாா்.

கோலடித்த மகிழ்ச்சியில் ஜப்பான் வீரா்கள்

நியூஸி.-ஆா்ஜென்டீனா ஆட்டம் டிரா: சென்னையில் நடைபெற்ற நியூஸிலாந்து-ஆா்ஜென்டீனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது.

நியூஸிலாந்து அணியில் எல்ம்ஸ் ஜான்டி 3, 31, 38-ஆவது நிமிஷங்களில் கோலடித்து ஹாட்ரிக் கோலடித்தாா். பதிலுக்கு ஈடுகொடுத்து ஆடிய ஆா்ஜென்டீனா அணியில் டோரி ஜியானி மேட்டியோ 1, கோரியா புருனோ 10, 39-ஆது நிமிஷங்களில் கோலடித்தனா்.

பந்தை கைப்பற்ற போராடும் நியூஸி-ஆா்ஜென்டீனா வீரா்கள்.

நெதா்லாந்து அபாரம்: மதுரையில் நடைபெற்ற மலேசிய-நெதா்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது நெதா்லாந்து. அந்த அணியில் கேப்டன் வேன் டா் வீன் கேஸ்பா் 8, 9 ஆவது நிமிஷங்களில் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.

வொல்பா்ட் ஜோப் 19 ஆவது நிமிஷத்தில் ஒரு கோலும், 20-ஆவது நிமிஷத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் ஒரு கோலும் அடித்தாா். 27-ஆவது நிமிஷத்தில் பாக்கா் தீஸும், 41-ஆவது நிமிஷத்தில் போயா்மன்ஸ் ஜீா்டும் கோலடித்தனா்.

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT