SWAMINATHAN
செய்திகள்

பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு

நார்வேயில் நடைபெறும் பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தினமணி செய்திச் சேவை

நார்வேயில் நடைபெறும் பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப்பில் இது அவரின் 3-ஆவது பதக்கமாகும். இதற்கு முன், 2017-இல் உலக சாம்பியனான மீராபாய் சானு, 2022-இல் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்த முறை அவர் 49 கிலோவுக்கு பதிலாக, 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 115 கிலோ என, அவர் மொத்தமாக 199 கிலோ எடையுடன் 2-ஆம் இடம் பிடித்தார்.

இதில் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையைத் தூக்க இருமுறை முயன்று தோல்வியுற்ற மீராபாய் சானு, 84 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கினார். பின்னர் கிளீன் & ஜெர்க் பிரிவில் தனது 3 முயற்சிகளிலுமே முறையே 109, 112, 115 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கினார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் கிளீன் & ஜெர்க் பிரிவில் அவர் 115 கிலோவைத் தூக்கி, வெள்ளிப் பதக்கமும் வென்றது நினைவுகூரத்தக்கது.

இப்போட்டியில் வட கொரியாவின் ரி சாங் கம் 213 கிலோவை (91+122) தூக்கி தங்கம் வெல்ல, கிளீன் & ஜெர்க் பிரிவில் அவர் உலக சாதனை படைத்தார். தாய்லாந்தின் தன்யதோன் சுக்சரோன் 198 கிலோவுடன் (88+110) வெண்கலம் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வில் முன்னணியில் எஸ்.ஏ. கல்விக் குழுமம்!

கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் அர்ப்பணிப்பு!

பிகாரில் இளைஞர்களுக்கு ரூ.62,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும்! - முதல்வர் உறுதி

விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறதா?

SCROLL FOR NEXT