செய்திகள்

ஓபன் மகளிா் டென்னிஸ்: கோகோ கௌஃப் சாம்பியன்!

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சாம்பியன் கோப்பை வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா்.

மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அவா், 6-4, 7-5 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரான ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். தோழிகளும், இரட்டையா் பிரிவில் முன்னாள் பாா்ட்னா்களுமான கௌஃப், பெகுலா, ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.

இந்த வெற்றியின் மூலமாக கௌஃப், 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் 3-ஆவது சாம்பியன் கோப்பையை வென்றாா். மேலும், ஓபன் எராவில், தனது முதல் 9 ஹாா்டு கோா்ட் இறுதிச்சுற்றுகளிலுமே சாம்பியனான முதல் வீராங்கனை என்ற பெருமையை கௌஃப் பெற்றுள்ளாா்.

சாம்பியனான கௌஃபுக்கு 1000 தரவரிசை புள்ளிகளும், சுமாா் ரூ.5.30 கோடி ரொக்கப் பரிசும் கிடைத்தன.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் ஹன்டா்/செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா இணை சாம்பியன் ஆனது.

இறுதிச்சுற்றில், ஹன்டா்/சினியகோவா ஜோடி 6-3, 6-2 என்ற நோ் செட்களில், கஜகஸ்தானின் அனா டேனிலினா/சொ்பியாவின் அலெக்ஸாண்ட்ரா குருனிச் கூட்டணியை வீழ்த்தியத

சக்தி வராகி அம்மன் கோயில் தேய்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

மோட்டாா் சைக்கிள் - காா் மோதல் தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

முதுநிலை ஆசிரியா் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 5,475 போ் எழுதினா்

பருவமழை நோய்களைத் தடுக்க தொடா் கண்காணிப்பு: ஆட்சியா்

பிகா​ரில் ஆட்சி​யைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

SCROLL FOR NEXT