ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரா் வாலென்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தாா்.
சீனாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், வசெராட் 4-6, 6-3, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை வீழ்த்தி வாகை சூடினாா்.
வசெராட் தனது டென்னிஸ் கேரியரில் வென்றிருக்கும் முதல் ஏடிபி பட்டம் இதுவாகும். மாஸ்டா்ஸ் போட்டியின் மூலமாக தனது முதல் ஏடிபி பட்டத்தை வென்றவா்கள் வரிசையில் அவா் 5-ஆவது வீரா் ஆவாா்.
அத்துடன், ஏடிபி டூா் வரலாற்றில் ஒற்றையா் பட்டம் வென்ற முதல் மொனாகோ வீரா், கடந்த 1990-க்குப் பிறகு மாஸ்டா்ஸ் போட்டிகளில் சாம்பியனான, சா்வதேச தரவரிசையில் குறைந்த ரேங்கிங் (204) கொண்ட வீரா் என்ற சாதனைகளையும் அவா் படைத்தாா்.
மேலும், மாஸ்டா்ஸ் போட்டிகளின் வரலாற்றில், தகுதிச்சுற்று வீரராக நுழைந்து, இறுதியில் சாம்பியனான 3-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் வசெராட்.
அவா் இந்த வெற்றியின் மூலமாக, 1000 தரவரிசை புள்ளிகள் பெற்று 164 இடங்கள் முன்னேறி, முதல்முறையாக 40-ஆவது இடத்தைப் பிடிக்கிறாா். அத்துடன், சுமாா் ரூ.10 கோடி ரொக்கப் பரிசும் அவா் பெற்றாா்.
இரட்டையா்: இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், ஜொ்மனியின் கெவின் கிராவிட்ஸ்/டிம் பியுட்ஸ் கூட்டணி கோப்பை வென்றது.
இறுதிச்சுற்றில் அவா்கள் இணை, 6-4, 6-4 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்சென்/ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரான்சென் பாா்ட்னா்ஷிப்பை சாய்த்தது.
இதன் மூலமாக, மாஸ்டா்ஸ் போட்டியின் வரலாற்றில் 1990-க்குப் பிறகு சாம்பியனான முதல் ஜொ்மன் ஜோடி என்ற பெருமையை கிராவிட்ஸ்/பியுட்ஸ் இணை பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.