மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 15-ஆவது ஆட்டம், மழை காரணமாக முடிவின்றி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
முதலில் இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் சேர்க்க, மழையால் நியூஸிலாந்து இன்னிங்ஸ் தொடங்குவது தாமதமானது. பின்னர் மழை தொடர்ந்து பெய்ததை அடுத்து, ஆட்டம் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இலங்கை விளையாடும் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது, இது 2-ஆவது முறையாகும். அந்த அணிக்கான இரு புள்ளிகளுமே அந்த ஆட்டங்களில் கிடைத்தவையாகும்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ûஸ தொடங்கிய விஷ்மி குணரத்னே, கேப்டன் சமரி அத்தபட்டு கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்து நல்லதொரு தொடக்கம் அளித்தது.
அரைசதம் கடந்த அத்தபட்டு, 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களுக்கு வெளியேற, குணரத்னே 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த ஹாசினி பெரெரா, ஹர்ஷிதா சமரவிக்ரமா இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது.
இதில் ஹர்ஷிதா 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தொடர்ந்து வந்த கவிஷா திலரி 4 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 6-ஆவது பேட்டராக வந்த நீலாக்ஷிகா சில்வா அதிரடி காட்ட, பியுமி வத்சலா 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு விடைபெற்றார்.
ஓவர்கள் முடிவில் நீலாக்ஷிகா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, அனுஷ்கா சஞ்சீவனி 6 ரன்களுடன் துணை நின்றார். நியூஸிலாந்து பெüலர்களில் சோஃபி டிவைன் 3, பிரீ இல்லிங் 2, ரோஸ்மேரி மேர் 1 விக்கெட் சாய்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.