செய்திகள்

ஜூனியர் பாட்மின்டன்: தன்வி வெற்றி

ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சர்மா, உன்னட்டி ஹூடா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தினமணி செய்திச் சேவை

ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சர்மா, உன்னட்டி ஹூடா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

2-ஆவது சுற்றில், மகளிர் ஒற்றையரில், தன்வி சர்மா 15-2, 15-1 என, மொனாகோவின் விக்டோரியா காலெட்காவை எளிதாக வீழ்த்தினார். உன்னாட்டி ஹூடா 15-8, 15-9 என ஹாங்காங்கின் லியு ஹோய் கியுவை வெல்ல, ரக்ஷிதா ஸ்ரீ 15-5, 15-9 என கனடாவின் லூசி யாங்கை வெளியேற்றினார்.

ஆடவர் ஒற்றையரில், 15-ஆம் இடத்திலிருக்கும் சூர்யக்ஷ் ராவத் 15-5, 15-8 என்ற கேம்களில் துருக்கியின் யிகிட்கான் எரோலை வென்றார். ரெüனக் செüஹான் 15-3, 15-6 என இலங்கையின் திசத் ரூபதுங்காவை வீழ்த்தினார்.

ஹமர் லால்தஸுவாலா 15-11, 15-5 என அமெரிக்காவின் ரைலன் டானை வெளியேற்றினார். தங்கர ஞான தத்து 15-10, 15-13 என பிரேஸிலின் மெண்டோன்கா ஜாகிமை வென்றார்.

மகளிர் இரட்டையரில் அனன்யா பிஷ்த்/ஏஞ்செல் புனேரா கூட்டணி, காயத்ரி ராவத்/மானசா ராவத் இணை வெற்றி கண்டது. ஆடவர் இரட்டையரில் பார்கவ் ராம்/விஷ்வா தேஜ் வெற்றி பெற்றனர்.

கலப்பு இரட்டையரில் லால்ராம்சங்கா/தாரினி சுரி இணை, பாவ்யா சாப்ரா/விஷாகா டோப்போ இணை வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள் உதவியாளா் பணிக்கு தகுதியானோா் வரும் 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

கரூர் பலி: அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் - முதல்வர்

கத்தி விழி வீச்சு... சோனாலி பிந்த்ரே!

பாகிஸ்தானை விற்ற கை பொம்மை! பாக். பிரதமர் ஷெபாஸுக்கு வலுக்கும் கண்டனம்!

அக்டோபர் வெப்பம்... அனைரா குப்தா!

SCROLL FOR NEXT