டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.
ஆடவர் ஒற்றையரில் ஆயுஷ் ஷெட்டி 19-21, 21-17, 15-21 என்ற கேம்களில், பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவிடம் போராடி வீழ்ந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், அன்மோல் கார்ப் 9-21, 14-21 என்ற நேர் கேம்களில், இந்தோனேசியாவின் புத்ரி குசுமவர்தனியிடம் தோல்வி கண்டார்.
ஆடவர் இரட்டையரில், பிருத்வி கிருஷ்ணமூர்த்தி/சாய் பிரதீக் இணை 13-21, 17-21 என, சீன தைபேவின் லியு குவாங் ஹெங்/யாங் போ ஹான் கூட்டணியிடம் தோல்வியுற்றது.
அதேபோல், கவிப்ரியா செல்வம்/சிம்ரன் சிங்கி ஜோடி 4-21, 11-21 என்ற கேம்களில், பல்கேரியாவின் கேப்ரியேலா ஸ்டோவா/ஸ்டெஃபானி ஸ்டோவா இணையிடம் தோல்வி கண்டது.
மகளிர் இரட்டையரில் ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா கூட்டணி 23-21, 17-21, 15-21 என ஸ்காட்லாந்தின் ஜூலி மேக்பெர்சன்/கிளாரா டாரன்ஸ் இணையிடம் வெற்றியை இழந்தது.
இந்தியாவின் இதர போட்டியாளர்கள் தங்கள் முதல் சுற்றில் புதன்கிழமை விளையாடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.