ஆர்ஜென் டீனாவை வீழ்த்தி மொராக்கோ அணி முதல்முறையாக ஃபிஃபா யு-20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
இந்தக் கோப்பையை இரண்டாவது ஆப்பிரிக்க அணியாக வென்று அசத்தியுள்ளது.
சீலேவில் ஜூலியோ மார்டினெஸ் பிரடானோஸ் தேசிய திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொராக்கோ அணி 2-1 என வென்றது.
இந்தப் போட்டியில் யாஷிர் ஜபிரி 12, 29ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
இத்தனைக்கும் 56 சதவிகிதம் பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த ஆர்ஜென் டீனா நான்கு முறை இலக்கை நோக்கி அடித்தும் ஒரு கோல் கூட கணக்கில் சேர்க்க முடியாமல் சென்றது.
மொராக்கோ அணியின் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டார். 11 கார்னர் வாய்ப்புகளில் ஒன்றைக் கூட கோலாக மாற்றாமல் ஆர்ஜென்டீனா சொதப்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.