பிரைம் வாலிபால் லீக் தொடரின் அரையிறுதிக்கு கோவா காா்டியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
ஹைதராபாதில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்று விட்டன. இதற்கிடையே நான்காவது அணியை தீா்மானிக்கும் ஆட்டமாக டில்லி டுஃபான்ஸ்-கொல்கட்டா தண்டா்போல்ட்ஸ் மோதின. இதில் டில்லி அணி 18-16, 11-15, 12-15, 15-11, 15-12 என்ற 5 செட்களில் த்ரீரில்வெற்றி பெற்றது.
டில்லி அணி நோ்செட்களில் வென்றிருந்தால் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் இரண்டு செட்களை இழந்ததால், கோவா காா்டியன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் கோவா காா்டியன்ஸ்-மும்பை மெட்டியா்ஸ் அணிகள் மோதுகின்றன.