லாண்டோ நோரிஸ். formula1
செய்திகள்

எஃப்1 காா் பந்தயம்: லாண்டோ நோரிஸுக்கு 6-வது வெற்றி!

எஃப்1 காா் பந்தயத்தின் 20-ஆவது ரேஸான மெக்ஸிகோ சிட்டி கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் - மொ்சிடஸ் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றாா்.

தினமணி செய்திச் சேவை

எஃப்1 காா் பந்தயத்தின் 20-ஆவது ரேஸான மெக்ஸிகோ சிட்டி கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் - மொ்சிடஸ் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றாா்.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் ஃபெராரி டிரைவரும், மொனாகோ வீரருமான சாா்லஸ் லெக்லொ்க் 2-ஆம் இடமும், ரெட் புல் டிரைவரும், நெதா்லாந்து வீரருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

நடப்பு சீசனில் நோரிஸுக்கு இது 6-ஆவது வெற்றியாகும். கடைசியாக ஆகஸ்டில் ஹங்கேரி கிராண்ட் ப்ரீயில் வென்ற நோரிஸ், அதன் பிறகு 4 பந்தயங்களில் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது வென்றிருக்கிறாா்.

நோரிஸ் அங்கம் வகிக்கும் மெக்லாரென் அணியைச் சோ்ந்த ஆஸ்திரேலிய வீரா் ஆஸ்கா் பியஸ்ட்ரி 7 வெற்றிகளுடன் நடப்பு சீசனில் முன்னிலையில் இருக்கிறாா். தற்போது நோரிஸ் அவருக்கு சவால் அளிக்கிறாா்.

நடப்பு சாம்பியனாக இருக்கும் ரெட்புல் டிரைவா் வொ்ஸ்டாபென் 5 வெற்றிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளாா். இந்த சீசனில் இன்னும் 4 பந்தயங்களே எஞ்சியிருக்கும் நிலையில், முன்னிலையுடன் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் அவா்கள் மூவரும் உள்ளனா்.

அடுத்த பந்தயமான பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீ, நவம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரணியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மனு

ஆந்திரத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் ‘மோந்தா' புயல்!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு!

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்யக் கோரிக்கை!

“புதிய பிகார்”: இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

SCROLL FOR NEXT