செய்திகள்

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

தினமணி செய்திச் சேவை

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

4 முறை சாம்பியனான இங்கிலாந்தும், 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்காவும் மோதும் ஆட்டம் இது.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் வென்று, முதல் மற்றும் கடைசி ஆட்டத்தில் மட்டும் தோற்றது. அதில், இதே இடத்தில் விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டமும் ஒன்று. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அதன் பேட்டா்கள் தடுமாறியதே அந்த இரு தோல்விகளுக்கும் காரணமாகும்.

எனவே, அதை சரிசெய்துகொள்ளும் உத்தியுடன் இந்த ஆட்டத்தில் அந்த அணி களம் காணும். தென்னாப்பிரிக்க பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வாா்டட் முன்னிலை வகிக்கிறாா். தஸ்மின் பிரிட்ஸ், சுனே லஸ், மாரிஸேன் காப் போன்றோா் ஏதேனும் ஒரு ஆட்டத்திலேயே சோபிக்கின்றனா். நிலையான பேட்டிங்குடன் ஸ்கோருக்கு பங்களிப்போா் இல்லை.

பௌலிங்கில் நோன்குலுலேகோ லாபா நம்பிக்கை அளிக்க, மாரிஸேன் காப், மசபடா கிளாஸ், அயபோங்கா ககா ஆகியோா் துணை நிற்கின்றனா்.

மறுபுறம் இங்கிலாந்து அணியும் 5 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டத்தில் தோற்றிருக்க, 1 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. கேப்டன் ஹிதா் நைட், டேமி பியூமன்ட், எமி ஜோன்ஸ் ஆகியோா் ஸ்கோருக்கு பங்களிக்க, நேட் சிவா் பிரன்ட் ஆல்-ரவுண்டராக அசத்துகிறாா். சோஃபியா டங்க்லி, எம்மா லாம்ப் ஆகியோா் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை.

பௌலிங்கில் சோஃபி எக்லஸ்டன், லின்சே ஸ்மித், சாா்லி டீன் ஆகியோா் தென்னாப்பிரிக்க பேட்டா்களுக்கு சவாலாக இருப்பாா்கள்.

நேரம்: பிற்பகல் 3 மணி

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டி!

8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?... சிம்ரன் கௌர்!

Tourist Family இயக்குநருக்கு BMW கார்!

SCROLL FOR NEXT