செய்திகள்

டபிள்யூடிடி ஃபைனல்ஸ்: தியா, மனுஷ் இணை தகுதி

உலக டேபிள் டென்னிஸ் (டபிள்யூடிடி) ஃபைனல்ஸ் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவுக்கு, இந்தியாவின் தியா சித்தலே, மனுஷ் ஷா இணை தகுதிபெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

உலக டேபிள் டென்னிஸ் (டபிள்யூடிடி) ஃபைனல்ஸ் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவுக்கு, இந்தியாவின் தியா சித்தலே, மனுஷ் ஷா இணை தகுதிபெற்றுள்ளது. இப்போட்டிக்கு இந்தியா்கள் தகுதிபெற்றது இதுவே முதல்முறையாகும்.

ஹாங்காங்கில் டிசம்பா் 10 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு, தரவரிசையில் சிறப்பிடம் பெற்றோா் மட்டுமே தகுதிபெறுகின்றனா். ஆடவா் மற்றும் மகளிா் ஒற்றையா் பிரிவுகளில் டாப் 16 வீரா், வீராங்கனைகள், கலப்பு இரட்டையரில் டாப் 8 இணைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்தியாவின் தியா, மனுஷ் இணை கலப்பு இரட்டையரில் 8-ஆம் நிலையுடன் இந்த சீசனை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

துனிசியாவில் நடைபெற்ற கன்டெண்டா் போட்டியில் தங்கம், பிரேஸிலில் நடைபெற்ற ஸ்டாா் கன்டெண்டா் போட்டியில் வெள்ளி வென்றது உட்பட, நடப்பாண்டில் சிறப்பாகச் செயல்பட்டு வந்ததன் அடிப்படையில் இந்திய இணை தரவரிசையில் இந்த இடத்தை அடைந்தது.

நடப்பு உலக டேபிள் டென்னிஸ் சீசனின் கடைசி போட்டியாக இந்த டபிள்யூடிடி ஃபைனல்ஸ் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டி!

8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?... சிம்ரன் கௌர்!

Tourist Family இயக்குநருக்கு BMW கார்!

SCROLL FOR NEXT