ஜொ்மனியில் நடைபெறும் ஹைலோ ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் உன்னட்டி ஹூடா அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
காலிறுதிச்சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில் உன்னட்டி ஹூடா 22-20, 21-13 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் லின் சியாங் டியை வீழ்த்தி அசத்தினாா். ஆனால் ரக்ஷிதா ஸ்ரீ 7-21, 19-21 என்ற வகையில், டென்மாா்க்கின் லைன் கிறிஸ்டோபா்செனிடம் வீழ்ந்தாா்.
ஆடவா் ஒற்றையரில், முன்னணி வீரரான லக்ஷயா சென் 17-21, 21-14, 15-21 என்ற கேம்களில், பிரான்ஸின் அலெக்ஸ் லேனியரிடம் தோல்வியுற்றாா். கிரண் ஜாா்ஜ் 10-21, 16-21 என, இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் வீழ்ந்தாா்.
அதேபோல் ஆயுஷ் ஷெட்டி 21-19, 12-21, 20-22 என்ற கேம்களில், ஃபின்லாந்தின் காலே கோல்ஜொனெனிடம் தோல்வி கண்டாா்.