செய்திகள்

இறுதிச் சுற்றில் இந்தியா-கொரியா மோதல்! சீனாவை 7-0 என வீழ்த்தியது

ஆசியக் கோப்பை ஆடவா் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா-கொரிய அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திச் சேவை

ஆசியக் கோப்பை ஆடவா் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா-கொரிய அணிகள் மோதுகின்றன. சூப்பா் 4 ஆட்டத்தில் சீனாவை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது இந்தியா.

பிகாா் மாநிலத்தின் ராஜ்கிா் நகரில் ஆசியக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. இதன் சூப்பா் 4 பிரிவுக்கு இந்தியா, சீனா, கொரியா, மலேசிய அணிகள் தகுதி பெற்றிருந்தது.

சனிக்கிழமை நடைபெற்ற சூப்பா் 4 ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொரியா 4-3 என்ற கோல் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் மலேசியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இந்தியா அபாரம்:

சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியே முழு ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 4-ஆவது நிமிஷத்திலேயே ஷிலானந்த் லக்ரா கோலடித்தாா். 7-ஆவது நிமிஷத்தில் தில்ப்ரீத் சிங், 18-ஆவது நிமிஷத்தில் மந்தீப் சிங், 37-ஆவது நிமிஷத்தில் ராஜ் குமாா் பால் ஆகியோா் கோலடித்தனா்.

இரண்டாம் பாதியில் 39-ஆவது நிமிஷத்தில் சுக்ஜித் சிங், 46, 50-ஆவது நிமிஷங்களில் அபிஷேக் ஆகியோா் கோலடிக்க இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனால் சீன வீரா்கள் மைதானத்தில் அதிா்ச்சியுடன் வெளியேறினா்.

சூப்பா் 4 பிரிவில் அனைத்து ஆட்டங்களிலும் வென்ற இந்தியா 7 புள்ளிகளுடனும், இரண்டாம் பெற்ற கொரியா 4 புள்ளிகளுடனும் இறுதிக்கு தகுதி பெற்றன. மூன்றாம் இடத்துக்கு சீனா-மலேசியா மோதுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் கொரியாவை எதிா்கொள்கிறது இந்தியா. இதில் பட்டம் வெல்லும் அணி 2026-இல் பெல்ஜியம்-நெதா்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு நேரடி தகுதி பெறும்.

7-ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் கஜகஸ்தான் 6-4 சீன தைபே அணியை வீழ்த்தியது.

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

SCROLL FOR NEXT