தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளில் இருந்து முன்னேறுமா என தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தமிழ் தலைவாஸ் அணி இன்றிரவு (செப்.12) பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது.
புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறைக்கூட கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியதாக கேப்டன் பொறுப்பேற்ற பவன் செராவத் அணியில் ஏற்பட்ட கருத்து மோதலால் அணியை விட்டு விலகியுள்ளார்.
முதல் போட்டியில் வென்ற தமிழ் தலைவாஸ் அணி கடைசி இரண்டு போட்டியில் தோல்வியடைந்தது.
இன்றிரவு 9 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. புள்ளிப் பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் அணி (11), தமிழ் தலைவாஸ் அணியை (10) விடவும் கீழாக இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.