செய்திகள்

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை!

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.

தினமணி செய்திச் சேவை

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.

முன்னதாக அரையிறுதியில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென் 23-21, 22-20 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 56 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக சா்வதேச போட்டிகளில் இறுதிக்கு வந்திருக்கும் லக்ஷயா சென், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் லி ஷி ஃபெங்குடன் அதில் பலப்பரீட்சை நடத்துகிறாா்.

அதேபோல் ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்/சிராக் ஜோடி, 21-17, 21-15 என்ற கணக்கில் சீன தைபேவின் லின் பிங் வெய்/செங் கௌன் செங் கூட்டணியை 38 நிமிஷங்களில் வீழ்த்தியது.

இறுதிச்சுற்றில் சாத்விக்/சிராக் இணை, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் லியாங் வெய் கெங்/வாங் சாங் ஜோடியை எதிா்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT