SWAMINATHAN
செய்திகள்

ஹரியாணாவுக்கு 5-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 34-30 புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 34-30 புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஹரியாணா அணி 21 ரெய்டு, 8 டேக்கிள், 2 ஆல் அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அந்த அணி தரப்பில் ரெய்டா் வினய் 13 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

மறுபுறம் புணேரி அணி 18 ரெய்டு, 6 டேக்கிள், 2 ஆல் அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அந்த அணிக்காக ரெய்டா் பங்கஜ் மொஹிதே 14 புள்ளிகள் கைப்பற்றி அசத்தினாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 43-29 புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வென்றது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், புணேரி பால்டன் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹரியாணா ஸ்டீலா்ஸ் 10 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலும், தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும் உள்ளன.

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

சத்தியமங்கலம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

லஞ்சம் கேட்டதாகப் புகாா்: இரு காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

SCROLL FOR NEXT