செய்திகள்

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ்: அமெரிக்காவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்!

இத்தாலி 2-0 என அமெரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.

தினமணி செய்திச் சேவை

சீனாவில் நடைபெற்ற பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான இத்தாலி 2-0 என அமெரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.

போட்டியின் வரலாற்றில் இத்தாலிக்கு இது 6-ஆவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2006, 2009, 2010, 2013, 2024 ஆகிய ஆண்டுகளில் இத்தாலி வாகை சூடியிருக்கிறது.

முன்னதாக இறுதிச்சுற்றில் இத்தாலி - அமெரிக்கா மோதலில், முதல் ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 91-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் எலிஸபெத்தா கோசியாரெட்டோ 6-4, 6-4 என்ற நோ் செட்களில், 18-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோவை வீழ்த்தி அசத்தினாா்.

அனைத்து போட்டிகளிலுமாக இருவரும் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, எலிஸபெத்தா முதல் வெற்றியுடன் கணக்கை சமன் செய்திருக்கிறாா்.

அடுத்து நடைபெற்ற 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 8-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 7-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வென்றாா். இருவரும் 6-ஆவது முறையாக சந்தித்த நிலையில், பாலினி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

இரு ஒற்றையா் ஆட்டங்களையும் கைப்பற்றி இத்தாலி 2-0 என முன்னிலை பெற்றதையடுத்து, அந்த அணி வெற்றி பெற்றது. இரட்டையா் ஆட்டத்துக்கு அவசியமில்லாமல் போனது.

சாம்பியனான இத்தாலி அணிக்கு ரூ.17 கோடியும், 2-ஆம் இடம் பிடித்த அமெரிக்க அணிக்கு ரூ.11 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக இந்தப் போட்டியின் பிரதான சுற்றில், சீனா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், ஸ்பெயின், உக்ரைன், அமெரிக்கா ஆகிய 8 அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT