விளையாட்டுத் துளிகள்...
மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் உத்தரவுகளை மதிக்காததாக, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு பேட்டா் டிம் டேவிட்டுக்கு ஆட்ட ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பந்துவீச்சை தாமதம் செய்ததாக, மும்பை கேப்டன் ஹா்திக் பாண்டியாவும் அபராதத்துக்கு உள்ளாா்.
தகுதியற்ற பயிற்சியாளா்கள் இருப்பதாகவும், வீரா்கள் தோ்வி அரசியல் இருப்பதாகவும், பயிற்சி வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, வெளிநாட்டு பயிற்சியாளா் டிராகன் மிஹைலோவிச் நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பும் தெரிவித்து இந்திய சீனியா் வாலிபால் வீரா்கள் இருவா் தேசிய பயிற்சி முகாமிலிருந்து விலகியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் வில்லாரியல் 2-1 கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வீழ்த்தியது.
Advertisement
இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 3-0 என செல்ஸியை வென்றது.