முகப்பு
கிரிக்கெட்

நீண்ட இடைவெளிக்குப் பிறகும் சிறப்பாக விளையாடியது எப்படி? விராட் கோலி பதில்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடியது குறித்து...

Updated On : 29 மார்ச் 2026, 6:15 pm IST
விராட் கோலி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று (மார்ச் 28) தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். விராட் கோலி கடைசியாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், 10 மாத இடைவெளிக்குப் பிறகு டி20 வடிவிலான போட்டியில் முதல் முறையாக நேற்று விளையாடினார். நீண்ட காலம் டி20 வடிவிலான போட்டிகளில் விளையாடாதபோதிலும், அவர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இந்த நிலையில், சீரான இடைவெளிகளில் தனக்கு கிடைத்த ஓய்வு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தோடு விளையாடுவதை உறுதி செய்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடும்போது, சோர்வடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. அதனால், சீரான இடைவெளியில் எனக்கு கிடைக்கும் ஓய்வு என்னை புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எப்போதெல்லாம் ஓய்வு முடிவடைந்து திரும்ப விளையாட வருகிறேனோ, அப்போதெல்லாம் என்னுடைய 120 சதவிகித உழைப்பை வழங்குகிறேன். சரியான தயாரிப்பு மற்றும் பயிற்சி இல்லாமல் நான் விளையாட வருவதில்லை. எனக்கு கிடைக்கும் கூடுதல் ஓய்வு மனதளவில் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது என்றார்.

summary

Regarding Royal Challengers Bangalore player Virat Kohli's explosive performance against Sunrisers Hyderabad...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.