முகப்பு
செய்திகள்

ஸ்பானிஷ் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பை காலிறுதியில் வென்ற பார்சிலோனா குறித்து...

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 1:55 PM
லாமின் யமால் - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா.
பகிர்:

ஸ்பானிஷ் கோப்பை எனப்படும் கோபா டெல் ரே காலிறுதியில் பார்சிலோனா எஃப்சி, செகன்ட் டிவிஷன் அணியான அல்பாசெட் அணியை 2-1 என வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக கோபா டெல் ரே தொடரில் அரையிறுத்திக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

அல்பாசெட் அணி தனது சொந்த திடலில் பார்சிலோனாவை கோபா டெல் ரே காலிறுதியில் எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் பார்சிலோனாவில் லாமின் யமால் 39ஆவது நிமிஷத்திலும் அரௌகோ 56ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

ஜவி மொரினோ 87-ஆவது நிமிஷத்தில் அல்பாசெட் அணி ஆறுதல் கோல் அடிக்க, இறுதியில் 2-1 என பார்சிலோனா வென்றது.

இந்தப் போட்டியில், பந்தினை 72 சதவிகிதத்தை பார்சிலோனா அணி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இந்த அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ரியல் மாட்ரிட் அணியை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் கோப்பை வென்ற பார்சிலோனா அணி இந்த சீசனிலும் கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

கடந்த 17 போட்டிகளில் 16-ல் பார்சிலோனா வென்று அசத்தியுள்ளது.

மற்ற காலிறுதிப் போட்டிகளில் வெலென்சியா - அத்லெடிக் கிளப், அலெவ்ஸ் - ரியல் சோசிடாட், ரியல் பெட்டிஸ் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதவிருக்கின்றன.

அரையிறுதிகள் இரண்டு லெக்ஸ் ஆட்டங்களாக நடைபெற, இறுதிப் போட்டி ஏப்ரலில் செவில்லாவில் நடைபெறுகிறது.

summary

Yamal scores as Barcelona beats Albacete 2-1 to reach Copa semifinals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.