டவுன் சின்ட்ரோம் விழிப்புணர்வு..! பார்சிலோனா ஜெர்ஸியின் எழுத்துருவில் மாற்றம்!
பார்சிலோனா ஜெர்ஸியில் புதிய எழுத்துருக்கள் மாற்றப்பட்டது குறித்து...
டவுன் சின்ட்ரோம் விழிப்புணர்வுக்காக பார்சிலோனா ஜெர்ஸியில் புதிய எழுத்துருவில் வீரர்களின் பெயர்கள், எண்கள் இடம்பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடிய பார்சிலோனா அணியினர், 7-2 என அபார வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி சர்வதேச டவுன்சின்ட்ரோம் நாளைக் கொண்டாடுகிறோம். 21ஆவது குரோமோசோமில் இருக்கும் 3 இழைகளைக் குறிப்பிட 3ஆவது மாதம் 21ஆம் தேதியில் (3/21) இந்த நாளைக் கொண்டாடுகிறோம்.
ஸ்பெயினைச் சேர்ந்த அன்னா விவேஸ் (41 வயது) டவுன் சின்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் பல விளையாட்டு அணிகளுக்கு அவரது ‘அன்னா’ எனும் எழுத்துருவை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நோயில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பார்சிலோனா இந்தப் புதிய ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பாக 13 ஆண்டுகளுக்கு முன்பாக, 2013ல் ஜான் கேம்பர் டிராபி சந்டோஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மாதிரியான ஜெர்ஸியை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.