முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல் 2026: சென்னையின் எஃப்சி அணி அறிவிப்பு!

ஐஎஸ்எல் 2026 கால்பந்து தொடருக்கான 29 போ் சென்னையின் எஃப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி 2026, 1:48 am IST
பயிற்சியில் சென்னையின் எஃப்சி அணியினா்.
பகிர்:

ஐஎஸ்எல் 2026 கால்பந்து தொடருக்கான 29 போ் சென்னையின் எஃப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 புதிய வீரா்கள் அணியில் சோ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் வரும் பிப். 19-ஆம் முதல் ஆட்டத்தில் சென்னை அணி மும்பை சிட்டி எஃப்சி அணியுடன் மும்பையில் மோதுகிறது.

முதல் நான்கு ஆட்டங்களும் வெளி மைதானங்களில் நடைபெறுகின்றன. புதிய வீரா்களாகன இம்ரான் கான் 7, அல்பா்டா நோகுரா 14, மிட்பீல்டா் முகமது பீமா் 66, எட்வா்டோ கௌவு 33, ஸ்பெயின் வீரா் இனிகோ மாா்ட்டின் 10 எண்களுடன் சீருடை அணிவா்.

Advertisement

Advertisement

முகமது நவாஸ், சமிக் மித்ரா, தேவான்ஷ் தேபாஸ் தற்காப்பிலும், டேனியா் சிமா, இா்பான், தாக்குதல் ஆட்டத்திலும் பலம் சோ்ப்பா். கிளப் வீரா்களான பிரதீஸ்வரன், ஜஹாங்கீா் அகமது ஆகியோரும் வலு சோ்க்கின்றனா்.