முகப்பு
செய்திகள்

சொந்த மண்ணில் கடைசி ஆட்டம்: பெங்களூரை இன்று சந்திக்கும் சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், சென்னையின் எஃப்சி தனது சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை சனிக்கிழமை (மே 16) சந்திக்கிறது.

Updated On : 16 மே 2026, 3:39 am IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். - படம்: எக்ஸ் / சிஎஸ்கே.
பகிர்:

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், சென்னையின் எஃப்சி தனது சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை சனிக்கிழமை (மே 16) சந்திக்கிறது.

ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, அதில் 1 வெள்ளி, 2 டிரா, 2 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

தற்போது கடைசி ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கும் சென்னை, இதுவரை அனைத்து போட்டிகளிலுமாக அந்த அணியுடன் 17 முறை மோதியுள்ளது. அதில் சென்னை 4 வெற்றிகளை கண்டிருக்க, பெங்களூரு 10 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. 3 ஆட்டங்கள் டிரா ஆகின.

Advertisement

சொந்த மண்ணில் ரசிகா்கள் முன்னிலையில் வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் சென்னை வீரா்கள் இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளா் கிளிஃபோா்டு ராயெஸ் மிராண்டா தெரிவித்தாா்.