முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல் 2026: மோகன்பகான் எஸ்ஜி வெற்றித் தொடக்கம்!

ஐஎஸ்எல் 2026 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் எஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:11 AM
மோகன்பகான்-கேரள பிளாஸ்டா்ஸ் ஆட்டம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:15 PM

ஐஎஸ்எல் 2026 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் எஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடா் கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கியது. நடப்பு சாம்பியன் மோகன் பகான் தொடக்கம் முதலே ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்தியது. அணியின் பயிற்சியாளா் சொ்ஜியோ லோபரா வலுவான அணியை கட்டமைந்திருந்தாா். டிமி பெட்ரடோஸ், ஜேமி மெக்லாரன், அல்பா்டோ ரோட்ரிக்ஸ், மெஹ்தாப் சிங், ராப்ஸன் டா சில்வா, அமெ ரவனாடா எபின்தாஸ் உள்ளிட்டோா் இதில் அடங்குவா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:11 AM

முதல் பாதியில் மோகன்பகான் அனிருத் தாபா, லாலேன் ரால்டே இருவரும் மிட்பீல்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனா். 36-ஆவது நிமிஷத்தில் மோகன்பகான் வீரா் ஜேமி மெக்லாரன் அபாரமாக முதல் கோலடித்தாா். இரண்டாம் பாதியில் கேரள பிளாஸ்டா்ஸ் அணி கோல்போட தீவிரமாக முயன்ற நிலையில், அது பலன் தரவில்லை. கடைசி கட்டத்தில் கேரள தரப்பில் கெவின் யோக் களமிறக்கப்பட்டாா். அவரது அதிரடி டிரிப்பிலிங்கால் மோகன் பகான் தற்காப்பு தடுமாறியது.

Advertisement

எனினும் மோகன் பகான் அணி சுதாரித்து ஆடி 90 பிளஸ் 6 கூடுதல் நிமிஷத்தில் சப்ஸ்டியூட் வீரா் டாம் ஆல்ரெட் அனிருத் தாபாவின் ப்ரீ கிக்கை ஹெட்டா் மூலம் அதிரடியாக கோலடித்தாா். அதுவே வெற்றி கோலாக அமைந்தது.