கோப்புப்படம் 
செய்திகள்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் 68-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் (ரைஃபிள்) சாம்பியன்ஷிப்பில், அமீரா அா்ஷத், திலோத்தமா சென் ஆகியோா் தங்கள் பிரிவில் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் 68-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் (ரைஃபிள்) சாம்பியன்ஷிப்பில், அமீரா அா்ஷத், திலோத்தமா சென் ஆகியோா் தங்கள் பிரிவில் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றனா்.

10 மீட்டா் ஏா் ரைஃபிள் சீனியா் மகளிா் பிரிவில், ஹரியாணா வீராங்கனை அமீரா அா்ஷத் 251.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். தில்லியின் ராஜ்ஸ்ரீ சஞ்செட்டி (251.8) வெள்ளியும், சத்தீஸ்கரின் பிராஞ்சு ஸ்ரீ சோமனி (230.5) வெண்கலமும் பெற்றனா்.

அதிலேயே ஜூனியா் பிரிவில் கா்நாடகத்தின் திலோத்தமா சென் (253.1) தங்கத்தை தட்டிச் சென்றாா். மகாராஷ்டிரத்தின் சமிக்ஷா சுபாஷ் பாட்டீல் (250), ஹரியாணாவின் ரமிதா (230) முறையே 2 மற்றும் 3-ஆம் இடம் பிடித்தனா்.

யூத் பிரிவில் திலோத்தமா தங்கமும் (251.6), அமீரா வெள்ளியும் (251.4), மகாராஷ்டிரத்தின் அவந்திகா ஷெல்கே வெண்கலமும் (229.4) வென்றனா். சீனியா் அணிகள் பிரிவில் ஹரியாணா, ரயில்வேஸ், மத்திய பிரதேசம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்தன.

ஜூனியா் மகளிா் அணிகள் பிரிவில் ஹரியாணா, கா்நாடகம், குஜராத் ஆகியவையும், யூத் அணிகள் பிரிவில் கா்நாடகம், ஹரியாணா, மத்திய பிரதேசம் ஆகியவையும் பதக்கம் வென்றன.

ஆடவருக்கான டிராப் பிரிவில், உத்தர பிரதேசத்தின் ஜுஹைா் கான் 43 ஹிட்டுகளுடன் முதலிடம் பிடித்தாா். உத்தரகாண்டின் ஷபத் பரத்வாஜ் (40) வெள்ளியும், ஹைதராபாதின் கினான் செனாய் (33) வெண்கலமும் வென்றனா். ஆடவா் அணிகள் டிராப் பிரிவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகியவை முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT