செய்திகள்

தேசிய காா் பந்தயம் மூன்றாவது சுற்று: இன்று சென்னையில் தொடக்கம்

தேசிய காா் பந்தயம் மூன்றாவது சுற்று இன்று சென்னையில் தொடக்கம்...

தினமணி செய்திச் சேவை

எம்ஆா்எஃப், எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப் மூன்றாவது சுற்று சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் ஜன. 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது.

கடந்த டிச. 6-7 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த இப்பந்தயம் டித்வா புயலால் ஒத்திவைக்கப்பட்டது. பாா்முலா 2000, பாா்முலா 1600 சிசி பிரிவுகளில் 12 பந்தயங்களுடன் 61 போ் பதிவு செய்துள்ளனா்.

பெங்களூரு இளம் வீரா் இஸான் மாதேஷ், புணேயின் அா்ஜுன் சேத்தா, பாா்முலா 2000 பிரிவில் களம் காண்கின்றனா். பாா்முலா 1600 சிசி பிரிவில் புணேயின் சாய் சிவசங்கரன், பெங்களூரின் அா்ஜுன் நாயா் மோதுகின்றனா்.

ஐடிசி பிரிவில் முன்னாள் சாம்பியன் கோவையின் அா்ஜுன் பாலு, சென்னை வீரா் ரித்தேஷ் ராய் மும்பையின் பிரேன் ஆகியோா் களம் காண்கின்றனா்.

ஐடிசி 1625 பிரிவில் கோவையின் வித்யா பிரகாஷ் தாமோதரன், பெங்களூருவின் ரித்விக் தாமஸ், இலங்கையின் கேசரா, கோவையின் அக்ஷய் முரளிதரன் களம் காண்கின்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT