செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து தொடருக்கு புத்துயிா்: பிப். 14-இல் தொடக்கம்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடா் 2026 ஆட்டங்கள் வரும் பிப். 14 முதல் தொடங்கி நடைபெறும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடா் 2026 ஆட்டங்கள் வரும் பிப். 14 முதல் தொடங்கி நடைபெறும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் கால்பந்துக்கு புதிய உத்வேகத்தை ஐஎஸ்எல் தொடா் அளித்து வந்தது. புதிய வீரா்கள் உருவாகி வந்தனா். இதற்கிடையே நிா்வாக சிக்கல், நீதிமன்ற வழக்குகளால் 2026 சீசன் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்தது. இதனால் வீரா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

இதற்கிடையே இப்பிரச்னையில் மத்திய அமைச்சா் நேரடியாக தலையிட்டாா். இதுதொடா்பாக மத்திய அரசு, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, 14 கிளப் அணிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனா். பிப். 14 முதல் தொடங்கும் இதில் ஒவ்வொரு அணியும் சொந்த, வெளி மைதானங்களில் ஆடும். மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெறும். கிளப்புகளுக்கு வருவாய், விளம்பரதாரா், திட்டமிடுதலில்கூடுதல் அதிகாரம் தரப்படுகிறது.

ஐஎஸ்எல்லுக்கு ரூ.10 கோடியும், ஐ லீக் தொடருக்கு ரூ.3.2 கோடியும், வழங்கப்படும். மகளிா் கால்பந்து லீக் தொடருக்கு 100 சதவீதம் நிதியுதவி தரப்படும்.

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

SCROLL FOR NEXT