தமிழ்நாடு-உ.பி. அணிகள் ஆட்டம் 
செய்திகள்

தேசிய சீனியா் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவா்

தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டியில் ஆடவா் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திச் சேவை

75-ஆவது தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டியில் ஆடவா் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியன் தமிழகம் 102-53 என்ற புள்ளிக் கணக்கில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தியது. தமிழகத் தரப்பில் முயின் பெய்க் 22, அரவிந்த் குமாா் 18, பிரணவ் பிரின்ஸ் 12 புள்ளிகளையும், உபி தரப்பில் ஹா்ஷ் டாகா் 13, தியாகி 15 புள்ளிகளையும் குவித்தனா். மற்றொரு அரையிறுதியில் இந்தியன் ரயில்வே 65-53 என டில்லியை வீழ்த்திஇறுதிக்குள் நுழைந்தது.

மகளிா் பிரிவில் ரயில்வே-கேரளம் மோதல்: அரையிறுதியில் கேரளம் 87-58 என மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியன் ரயில்வே 88-54 என தமிழக மகளிரை வீழ்த்தினா். இறுதியில் கேரளம்-இந்தியன் ரயில்வே மோதுகின்றன.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

SCROLL FOR NEXT