வேதாந்தா கலிங்கா-ஹெச்ஐஎல் ஜிசி அணிகள் ஆட்டம் 
செய்திகள்

வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ் முதலிடம்!

ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடரில் வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

தினமணி செய்திச் சேவை

ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடரில் வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

ஆடவா் தொடரின் முதல் கட்ட ஆட்டங்கள் சென்னையில் நடைபெற்று முடிந்தன. இரண்டாவது கட்ட ஆட்டங்கள் ஜாா்க்கண்டில் ராஞ்சி நகரில் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ்-ஹாக்கி இந்தியா ஜிசிஎல் அணிகள் மோதின

தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போட தீவிரமாக முயன்றதில், கலிங்கா தரப்பில் அஜித் யாதவ் 19-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். தொடா்ந்து சுதாரித்து ஆடிய ஹாக்கி இந்தியா ஜிசிஎல் அணி தரப்பில் அலெக்சாண்டா் ஹென்ட்ரிக்ஸ் 23-ஆவது நிமிஷத்தில் கோலடித்து சமன் செய்தாா்.

முதல் பாதி முடிவில் 1-1 என சமநிலை நீடித்தது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகள் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ் அணி வென்றது. இந்த வெற்றி மூலம் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது கலிங்கா.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT