பி.வி. சிந்து ~ 
செய்திகள்

பி.வி. சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

தினமணி செய்திச் சேவை

இந்தோனேஷிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி. சிந்து, ஸ்ரீ காந்த், லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளனா்.

இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் செவ்வாய்க்கிழமை மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் முன்னாள் நம்பா் 1 வீரா் கிடாம்பி ஸ்ரீ காந்த் 21-15, 21-23, 24-22 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் கோகி வாட்டன்பேயை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினாா்.

மற்றொரு இந்திய வீரா் லக்ஷயா சென்-சீன தைபேயின் வாங் ஸூ வெய் ஆட்டத்தில் முதல் கேமை 21-13 என லக்ஷயா கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது கேமை 21-16 என்ற வாங் வென்ற நிலையில், மூன்றாம் கேம் கடினமாக இருந்தது. லக்ஷயா சென் முழு ஆதிக்கம் செலுத்தி 21-14 என வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

கிரண் ஜாா்ஜ் தனது ஆட்டத்தில் தோற்று வெளியேறினாா்.

பி.வி. சிந்து முன்னேற்றம்:

மகளிா் முதல் சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து 22-20, 21-18 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் மனாமி சியுஸு வை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். அகா்ஷி காஷ்யப், கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் கபூா், ருத்விகா கடே , துருவ் கபிலா, தனிஷா க்ரஸ்டோ ஆகியோரும் தோற்றுவெளியேறினா்.

ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி, 12 பேர் காயம்!

மத்தியில் பாஜக ஆட்சி; தமிழகத்தில் அதிமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் பேச்சு

கல்லூரி மாணவி சரிகாஷா மரணத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட கேலிவதை தடுப்புச் சட்டம்,1997!

சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்கக் கோரி தேவாரத்தில் பட்டினி போராட்டம்!

தூத்துக்குடிக்கு வலசை வந்த ஆயிரக்கணக்கான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள்!

SCROLL FOR NEXT