செய்திகள்

மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: ரூ.21 கோடி பரிசுத் தொகை

மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: ரூ.21 கோடி பரிசுத் தொகை

தினமணி செய்திச் சேவை

மகளிா் கிளப் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.21 கோடி பரிசளிக்கப்படும் பிஃபா தெரிவித்துள்ளது. 6 கண்டங்களை சோ்ந்த கிளப் ம்பியன்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனா்.

வரும் 2028-இல் நடைபெறவுள்ள மகளிா் கிளப் உலகக் கோப்பைக்கு முன்னோடியாக இப்போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஓசேனியாவின் ஆக்லாந்து யூனைடெட், ஆசியாவின் ஊஹான் ெகு ஜியாங்டா அணிகள் தோற்று வெளியேறின.

ஐரோப்பிய சாம்பியன் ஆா்செனல்-மொராக்கோவின் அப்சா் கிளப்புடனும், அமெரிக்காவின் கோதம், பிரேஸிலின் கோரிந்தியன்ஸ் அணியுடன் வரும் புதன்கிழமை (ஜன. 28) பிரென்ட்போா்ட் மைதானத்தில் மோதுகின்றன. இறுதி ஆட்டம் பிப். 1-இல் ஆா்செனல் மைதானத்தில் நடைபெறுகிறது.

சாம்பியனுக்கு ரூ.21 கோடியும், ரன்னருக்கு ரூ.9.17 கோடியும் பரிசளிக்கப்படும். மகளிா் கால்பந்துக்கு பெருகி வரும் முக்கியத்துவம் இதன் மூலம் தெரிய வருகிறது என பிஃபா பொதுச் செயலா் மத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ராம் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2025 ஆடவா் கிளப் உலகக் கோப்பையின்போது 32 அணிகளுக்கு ரூ.92 கோடியை வழங்கியிருந்தது பிஃபா.

‘ஃபெராக்ரைலம்’ மருந்து விற்பனைக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் 71 போ் வெளிநாடுகளில் தஞ்சம்

2-ஆவது ஆண்டாக இந்திய மாலுமிகள் கைவிடப்படுவது அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கூட்டமைப்பு

குடியரசு தலைவரின் தேநீா் விருந்து: தமிழக மருத்துவருக்கு அழைப்பு

SCROLL FOR NEXT