ஃபிஃபா நடத்தும் அறிமுக மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டின் வெற்றியாளருக்கு 2.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.21.8 கோடி) பரிசுத்தொகை வழங்கப்படுமெனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக ஃபிஃபா நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்துப் போட்டிகள் அடுத்த வாரம் ஆர்செனல் திடலில் தொடங்குகின்றன.
இதில் மொத்தமாக ஆறு கண்டத்தில் இருக்கும் சாம்பியன்ஸ் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
வெற்றியாளருக்கு ரூ.21 கோடியும் மொத்தமாக இந்தப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு ஃபிஃபா 3.9 மில்லியன் டாலர் (ரூ. 35.72 கோடி) செலவிடுகிறது.
மகளிர் கிளப் உலகக் கோப்பை 2028-க்கான ஒத்திகையாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆடவருக்கான கிளப் உலகக் கோப்பை போட்டிகளில் ஃபிஃபா நிர்வாகம் பரிசுத் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 8,300 கோடி) செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதிப் போட்டிகள் வரும் ஜன. 28 ஆம் தேதி லண்டனில் நடைபெறுகின்றன.
1. ஐரோப்பியாவின் சாம்பியன் ஆர்செனல் - மொரோக்காவின் ஏஎஸ்எஃப்ஏஆர்
2. அமெரிக்காவின் கோதம் எஃப்சி - பிரேசிலின் கொரியாந்திஸ்
இறுதிப் போட்டி பிப்.1ஆம் தேதி லண்டனில் ஆர்செனல் கால்பந்து திடலில் நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.