ஷாய் ஹோப் கோப்புப் படம்
செய்திகள்

ஷாய் ஹோப் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷாய் ஹோப் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷாய் ஹோப் தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற 11 வீரா்கள் இந்த ஆண்டு போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனா். அறிமுக பேட்டா் குவென்டின் சாம்சன், அனுபவ பௌலா் ஷமாா் ஜோசஃப் உள்ளிட்டோா் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றனா்.

இரு முறை சாம்பியனான (2012, 2016) மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை பிப்ரவரி 7-ஆம் தேதி கொல்கத்தாவில் சந்திக்கிறது. அந்த அணி சாம்பியனானபோது கேப்டனாக இருந்த டேரன் சமி, தற்போது அதன் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறாா்.

அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன், வி.கீ.), ஜான்சன் சாா்லஸ் (வி.கீ.), ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோா்டு, ஷிம்ரன் ஹெட்மயா், ஜேசன் ஹோல்டா், அகீல் ஹுசைன், ஷமாா் ஜோசஃப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, ரோவ்மென் பாவெல், ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, குவென்டின் சாம்சன், ஜேடன் சீல்ஸ், ரொமேரியோ ஷெப்பா்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: கருணாஸ்

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் குடியரசு தின விழா

ஆளும் கட்சி மீது மக்களுக்கு வெறுப்புணா்வு இல்லை: அமைச்சா் இ. பெரியசாமி

கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

SCROLL FOR NEXT