FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா - புகைப்படங்கள்

Updated On : 1 மார்ச் 2026, 11:42 pm IST
பகிர்:
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 195 ரன் எடுத்தது. - xsm
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ரன்கள் (5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ரோமன் பௌவல் 19 பந்துகளில் 34 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர். கேப்டன் சாய் ஹோப் 32 ரன்கள், ஷிம்ரன் ஹெட்மேயர் 27 ரன்கள் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 14 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

Advertisement

Advertisement

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். - xsm
இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மேற்கிந்திய தீவுகளின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சக வீரர்களுடன் கொண்டாடும் இந்திய அணியின் வீரரான ஹார்திக் பாண்ட்யா. - xsm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments