முதல் டெஸ்ட்: இமாம் உல் ஹக், ஷான் மசூத் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சாய் ஹோப் 92 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, காவெம் ஹாட்ஜ் 84 ரன்கள், ஷமர் ஜோசப் 23 ரன்கள் மற்றும் சந்தர்பால் 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் முகமது அலி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது அப்பாஸ் 3 விக்கெட்டுகள், குர்ரம் ஷாஷத் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் அமர் ஜமால் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
Advertisement
Advertisement
இமாம் உல் ஹக், ஷான் மசூத் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
மேற்கிந்தியத் தீவுகள் அணி 311 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஸான் அவைஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின், இமாம் உல் ஹக் மற்றும் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இமாம் உல் ஹக் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 88 ரன்களுடனும், சல்மான் அலி அகா 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமர் ரோச், ஜேடன் சீல்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 112 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pakistan has scored 199 runs for the loss of 3 wickets in the first innings of the first Test match against the West Indies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.