முதல் டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை; வெற்றி யாருக்கு?
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு 372 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் நிஷான் மதுஷ்கா 6 ரன்களிலும், லகிரு உதாரா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Advertisement
Advertisement
பசிந்து சூரியபந்தாரா அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மானவ் சுதர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். கமிந்து மெண்டிஸ் 2 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால், இலங்கை அணி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் சோனல் தினுஷா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 31 ரன்களுடனும், சோனல் தினுஷா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா தரப்பில் மானவ் சுதர் இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
கடைசி நாளில் இலங்கை அணியின் வெற்றிக்கு 288 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
In the first Test match against India, the Sri Lankan team has scored 84 runs for the loss of 4 wickets in its second innings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.