FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

டிரினிடாட் டெஸ்ட்: பாகிஸ்தான் சுழலில் தடுமாறும் மேற்கிந்தியத் தீவுகள்!

பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:21 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் சஜித் கான். - AFP
பகிர்:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் பிரையன் லாரா திடலில் ஆக.2ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அப்துல்லா ஷபிஃக் 160 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement

Advertisement

தற்போது, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் மே.இ. தீவுகள் அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கெவேம் ஹோட்கே 34 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பாக சுழல்பந்து வீச்சாளர்கள் சஜித் கான் 4, அலி உஸ்மான் 2 என அசத்தி மே.இ. தீவுகள் அணியை தங்களது சுழலில் தடுமாற வைத்தார்கள்.

மீதம் இரண்டு நாள்கள் இருக்கையில் மே.இ. தீவுகள் அணி 60 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் அணி வெல்லுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, தொடரில் 0-1 என பாகிஸ்தான் பின்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட்டில் வென்றால் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Trinidad Test: West Indies struggle against Pakistan's spin!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments