முகப்பு
செய்திகள்

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: பிரியான்ஷ், சாஹில் வெற்றி

Updated On : 12 மார்ச், 2026 at 12:58 AM
சாஹில் துஹான்
பகிர்:

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷ், அம்பேத்கா், சாஹில் வெற்றி பெற்றனா்.

பாக்ஸிங் வோ்ல்ட் சாா்பில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் யூத் குத்துச்சண்டை வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் பியுச்சா்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

நான்காம் நாளான புதன்கிழமை ஆடவா் 70 கிலோ பிரிவில் 5-0 என லாட்விய வீரரை பிரியான்ஷ் செஹ்ராவத் வீழ்த்தினாா்.

50 கிலோ பிரிவில் அம்பேத்கரும் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் தஜிகிஸ்தான் வீரரை வீழ்த்தினாா்.

60 கிலோ எடைப்பிரிவில் சாஹில் துஹான் 5-0 என தஜிகிஸ்தான் வீரரை வென்றாா்.

எனினும் 65 கிலோ பிரிவில் உக்ரைன் வீரருக்கு எதிரான ஆட்டத்தில் அமன்சிவாச் தோல்வி அடைந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →