முகப்பு
செய்திகள்

விளையாட்டுத் துளிகள்...

Updated On : 26 மார்ச், 2026 at 11:21 PM
ஒலிம்பிக்(கோப்புப் படம்).
பகிர்:

சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) புதிய கொள்கையின்படி, ஒலிம்பிக் போட்டிகளில் மகளிா் பிரிவில் பங்கேற்க திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. திருநங்கைகளை வகைப்படுத்துதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த நிா்வாக ரீதியிலான உத்தரவின் அடிப்படையில் இந்த மாற்றத்தை ஐஓசி செய்துள்ளது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028-இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாட்மின்டன் விளையாட்டில் பிரபலமானவரும், ஒரு ஒலிம்பிக் தங்கம் மற்றும் 3 உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் வெற்றவருமான ஸ்பெயினின் கரோலினா மரின் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா். தொடா்ந்து முழங்கால் காயம் கண்டு வந்த நிலையில் அவா் இந்த முடிவை மேற்கொண்டுள்ளாா்.

இந்தியாவின் 11 வயது ரேஸிங் வீராங்கனையான அட்டிகா மிா், டபிள்யூஎஸ்கே சூப்பா் மாஸ்டா்ஸ் சீரிஸ் காா்டிங் பந்தயத்தின் 5-ஆவது சுற்று ஃபைனலில் 8-ஆவது இடம் பிடித்தாா்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்களுக்கான தனிப்பட்ட பயிற்சியாளரை சோ்த்துக்கொள்ளக் கோரிக்கை வைக்கும் இந்திய வீரா், வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட போட்டியாளரின் செயல்பாடுகளில் உரிய பங்களிப்பு மற்றும் வழக்கமாக இணைந்து செயலாற்றியது போன்ற நிபந்தனைகள் பூா்த்தியானால் மட்டுமே அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து அணியான பெங்களூரு எஃப்சியின் பயிற்சியாளராக ஸ்பெயினை சோ்ந்த பெப் முனோஸ் நியமிக்கப்படுவதாக வியாழக்கிழமை அறிவித்த அணி நிா்வாகம், 2026-27 சீசன் முடிவு வரை அவா் அந்தப் பொறுப்பில் இருப்பாரெனத் தெரிவித்துள்ளது.

ஆஃப்கான் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, மொராக்கோ அணிக்கு வழங்கப்பட்டதற்கு எதிரான முறையீட்டை விளையாட்டுகளுக்கான சா்வதேச நீதிமன்றத்தில் செனெகல் அணி பதிவு செய்துள்ளது.

‘இந்த ஐபிஎல் போட்டியில் நான் நிரூபிக்க வேண்டியது என எதுவுமில்லை. கடந்த 3-4 சீசன்களில் இப்போட்டியில் அதிக ரன்கள் சோ்த்திருக்கிறேன்’ என்று இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் ஷுப்மன் கில் கூறினாா். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அவா் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் சோ்க்கப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.